சீனாவில் கொரோனா போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகி பரவி வருகிறது.
வைரஸ் பரவல்
சீனாவில் கொரோனா போன்று ‘லங்கையா’ என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மகாணத்தில் உள்ள 35 நபர்களுக்கு இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் காரணமாக அவர்களுக்கு காய்ச்சல், இருமல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல் மற்றும் தசை பிடிப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக டாக்டர்கள் அறிவுறித்தியுள்ளன. இதனையடுத்து சோதனை நடத்தியபோது இந்த வைரஸ் பற்றி டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். லங்கையா வைரஸ் தாக்கி இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என சீனா செய்தி நிறுவனங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. லங்கையா வைரஸ் தாக்குதலை தடுக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. 2019 ஆம் ஆண்டில் லங்கையா வைரஸ் முதன் முதலில் மனிதர்களில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

