அரசியல்இந்தியாதமிழ்நாடு

500-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பாஜகவில் இணைந்தார்கள்!

தஞ்சாவூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் 500-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர்.

பாஜக அண்ணாமலை

தஞ்சாவூரில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ரஜினி கணேசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். அப்போது அண்ணாமலை பேசுகையில், ‘பாரத பிரதமர் நரேந்திர மோடி நம்மைப்போல ஒரு பாஜக தொண்டன். அவர் நமது நாட்டிற்காக வேலை செய்கிறார். தாய்மொழி, கலாச்சாரம் எல்லாத்தையும் தாண்டி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் பாஜகவை ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

ஆன்மிக அரசியல்

அவரவர் மொழிக்கு உரிய மரியாதையை தரப்படும். அவரவர் மாநிலங்களின் அவரவர் இருக்க வேண்டும். ஆனால் இவை அனைத்தையும் சேர்த்து பார்க்கும் போது ஒரு தேசிய வாதியாக இருக்க வேண்டும். ஆன்மிகம் என்பது இந்து மதத்தையோ, இஸ்லாம் மதத்தையோ, கிறிஸ்தவ மதத்தையோ, சார்ந்தது அல்ல. ஆன்மிகம் என்பது எதிலும் பற்று இன்றி இருக்க வேண்டும். அதுவே ஆன்மிகம்.

கட்சிகளில் ஓனர்

மேலும், இங்கு ஒரு சில கட்சிகளில் ஓனர் இருப்பார்கள். அங்கு இருப்பவர்கள் தந்தையிடம் கைகட்டி நிற்க வேண்டும், பிறகு மகனிடம் கைகட்டி நிற்க வேண்டும், பின்னர் பேரனிடம் கைகட்டி நிற்க வேண்டும். டெல்லியிலும், கோபாலபுரத்திலும் அப்படியான ஓனர்கள் இருப்பார்கள். ஆனால் பாஜகவில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். எனவே யாரிடமும் கை கட்டி நிற்க வேண்டியில்லை’ என தெரிவித்தார்.

2024 பாஜக வெற்றி

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ஜனாதிபதி யார் ? என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். பாஜகவில் 49 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் குட்டிக்கரணம் போட்டாலும், பொது வேட்பாளரை நிறுத்தினாலும், பாஜகவை ஒன்றும் செய்ய முடியாது. பாஜக வேட்பாளர்களை வைத்தே நாங்கள் தனியாக வென்றுவிடுவோம்’ என தஞ்சாவூரில் நடந்த உறுப்பினர்கள் இணைப்பு நிகழ்ச்சியில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related posts