செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டி தீக்குளிக்க முயன்றார்.
தீக்குளிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே வீரபோகம் கிராமத்தை சேர்ந்த 70 வயதான மூதாட்டி கல்யாணி. இவர் நேற்று செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்தார். அப்போது திடீரென தனது பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி மூதாட்டியை விசாரித்துள்ளன. அப்போது மூதாட்டி கூறுகையில், ‘விசாரணையில் கல்யாணிக்கு வீரபோகம் கிராமத்தில் சொந்தமாக 8 சென்ட் நிலம் இருந்துள்ளது. நிலத்தை தனது பேரனான ஞானசேகர் என்பவர் வி.ஏ.ஓ உதவியுடன் அவரது பெயருக்கு பட்டாவை மாற்றிக்கொடுள்ளார். தற்போது வயது முதிர்ச்சியின் காரணமாக யாரும் பார்த்து கொள்ளாததால் அந்த நிலத்தை விற்பனை செய்ய முயன்றுள்ளார். அப்போது தான் உண்மை தெரிய வந்தது என கூறினார். இதனால் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

