செஸ் ஒலிம்பியாட் குறித்த விளம்பர பேனர்களில் பாஜகவினர் ஒட்டிய பிரதமர் மோடியின் புகைப்படத்தை கருப்பு மையால் அழித்த பெரியார் திராவிடர் கழகத்தினர்.
பாரதிய ஜனதா கட்சி Vs பெரியார் திராவிடர் கழகம்
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விளம்பர பேனர்களில் இந்தியப் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாத நிலையில், தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டுத் திறன் அணித் தலைவர் அமர் பிரசாத் உள்ளிட்ட பாஜகவினர் விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டினர்.
இவ்வாறு நிறைய பேனர்களிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பாஜகவினர் ஒட்டினர். இதை எதிர்க்கும் விதமாக செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர்களில் ஒட்டப்பட்டிருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தில் பெரியார் திராவிடர் கழகத்தினர் கருப்பு மையால் அழித்தனர்.

