மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைப்பு
நாட்டின் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி, பெட்ரோல், டீசல் விலைஉயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் கடந்த 7 நாட்களாக நாடாளுமன்ற அவையில் அமளியில் ஈடுபட்டதால் ஒவ்வொரு நாளும் அவைகள் முடங்கின. இதற்கிடையே அமளியில் ஈடுபட்ட 20 எதிர்க்கட்சியை சார்ந்த எம்.பிக்கள் மாநிலங்களவையில் இருந்து நடைபெறும் அவை முழுவதும் இடைநீக்கம் செய்து அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயணன் அறிவித்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இன்று காலை முதல் எம்.பிக்கள் இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் ஒரு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 12 வரை நடைபெற்று வருகின்றது. இதனிடையே, 20 மாநிலங்களவை உறுப்பினர்கள், 4 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதற்க்கு அனைத்து எதிர்க்கட்சி எம்.பிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை 50 மணி நேரம் பகல், இரவாக போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளது.

