அரசியல்இந்தியா

காங்கிரஸ் பாத யாத்திரை : தீம் இசை, லோகோ அறிமுகம்!

காங்கிரஸ் பாத யாத்திரை திட்டத்தின் தீம் இசை, லோகோ ஆகியவை இன்று வெளியிடப்பட்டது.

பாத யாத்திரை

ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரும் 7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார். 150 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த பாத யாத்திரைக்கான தீம் இசை வெளியிடும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று இதற்கான இணையதளம், லோகா, முழக்கம், தீம் இசை மற்றும் துண்டு பிரசுரம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது.

Related posts