கல்விசமூகம்தமிழ்நாடு

வன்முறையில் பள்ளி டிராக்டரை இயக்கிய இளைஞர் சரண் !

கனியாமூர் தனியார் பள்ளியில் வன்முறையின் போது, பள்ளிப் பேருந்தை டிராக்டர் மூலம் இடித்து சேதப்படுத்திய இளைஞர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தனியார் பள்ளியில் வன்முறை

கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்ததைக் கண்டித்து கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் இறுதியில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளி பேருந்தை டிராக்டர் மூலம் இடித்து சேதப்படுத்தப்பட்ட வீடியோவும் வெளியாகி வன்முறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சின்னசேலத்தைச் சேர்ந்த ஜெயவேல் என்ற நபர் பள்ளி பேருந்தை டிராக்டர் மூல சேதப்படுத்தியது தெரிய வந்தது. எனினும், அவர் தற்போது,  தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், நீதிபதியின் உத்தரவின் பேரில், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வன்முறையில் ஈடுபட்டதாக ஏற்கனவே 341 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts