சினிமாமருத்துவம்

இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் திடீர் அனுமதி !

இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா உடல்நலக்குறைவால் திடீரென சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுசுக்கு தாத்தாவாக நடித்த பாரதிராஜாவின் கதாபாத்திரத்தை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் மயக்கம் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனது நீலாங்கரை இல்லத்தில் பாரதிராஜா ஓய்வெடுத்து வந்தார்.

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், இன்று காலை திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பாரதிராஜாவுக்கு தீவி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவர் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts