தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்ற நடிகர் சூர்யா இன்று மாலை சென்னை திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா
பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தை அடுத்து நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் ஒப்பந்தமானார். சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. வணங்கான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் விடுமுறை நாட்களை செலவழிக்க அமெரிக்கா சென்றார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இந்தியா திரும்பிய சூர்யா மும்பையில் தங்கியிருந்தார். தற்போது இன்று மாலை அவர் சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது. பின்னர் விரைவில் சூர்யா படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

