சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து காண்போம்.
சென்னையில் கடந்த மூன்று நாள்களாக தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்தது. அதனைத்தொடர்ந்து இன்றும் தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது.
தங்கம் விலை
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 7 அதிகரித்தும் சவரனுக்கு ரூ.56 அதிகரித்தும் விற்பனையாகிறது. அதன்படி ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.4,735-க்கும் சவரனுக்கு ரூ.37,880-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,137-க்கும் சவரனுக்கு ரூ.41,096-க்கும் விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,824-க்கு விற்பனையானது.
குறைந்தது வெள்ளியின் விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.60 ஆகவும் கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.60,000-க்கு விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.60,800-க்கு விற்பனையானது.

