ஈரோட்டில் உள்ள இஸ்லாமியர் வீட்டில் நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்றும் 2வது நாளாகவும் சோதனை நடத்தி வருகின்றனர்.
என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென உள்ளே நுழைந்து அதிரடியாக விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த 5 நபரிடம் விசாரணை நடத்திய பின்பு, வீட்டில் இருந்த தகவல் தொடர்புக்கு பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் போன், லேப்டாப், டைரிகள், சிம்கார்டுகள், வங்கி பாஸ் புக் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தனர். இரண்டாவது நாளான இன்றும் அங்கு சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், ஈரோட்டில் தேசிய புலனாய்வு முகமை துறையினர் விசாரணை நடப்பதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘பெங்களூர் திலக் நகர் பகுதியில் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ள அக்தர் உசேன் என்பவரை கடந்த 24ம் தேதி கைது செய்து விசாரித்தோம், அவர் கொடுத்த தகவல் பெயரில் சேலத்தில் உள்ள அப்துல் அலி ஜூபா என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் இங்கு விசாரணை மேற்கொள்கிறோம்’ என கூறியுள்ளனர்.
பிரதமர் நரேந்திரமோடி உலக அளவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைக்க தமிழகம் வர உள்ள நிலையில் என்.ஐ.ஏ குழுவினர் ஈரோட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு இருப்பது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

