உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைமை நீதிபதி நியமனம்
இவர் நவம்பர் 9ம் தேதி 1957 ஆண்டு மும்பையில் பிறந்துள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி என். வி. இரமணா வரும் ஆகஸ்ட் 26ம் தேதி அன்றுடன் பணி ஓய்வு பெற்கிறார். எனவே யு. யு. லலித் ஆகஸ்ட் 27ம் தேதி அன்று தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். உதய் உமேஷ் லலித், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரிவில் இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இரண்டாவது நீதிபதி ஆவார். லலித்துக்கு முன், நீதிபதி சிக்ரி 1964ம் ஆண்டு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மன்றத்திலிருந்து நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் உச்சநீதிமன்ற நீதிபதி ஆவார்.

