ஜம்மு-காஷ்மீர், குல்காம் மாவட்டத்தில் பிரைஹார்ட் கத்போரா என்ற இடத்தில் இன்று பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
தொடர் துப்பாக்கிச் சூடு
கிடைத்த தகவலின்படி பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்களும் பயங்கரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்குமிடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.

