பெரும்பாக்கத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி சிறுமி பள்ளிக்கு செல்லவில்லை. சிறுமியை பெற்றோர் பள்ளிக்கு செல்ல வற்புறுத்தி உள்ளனர். ஆனால், அந்த சிறுமி பள்ளிக்கு செல்ல பயந்து அழுது இருக்கிறார். சிறுமிடம் பெற்றோர் விசாரித்த போது பள்ளியில் பியூனாக வேலை பார்க்கும் ராஜ் (38) என்பவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ராஜ் எனபவரை கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

