Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 23
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»இசையில் தொடங்குதம்மா !!! – பண்டைத்தமிழர் பயன்படுத்திய தமிழிசை கருவிகள் !

இசையில் தொடங்குதம்மா !!! – பண்டைத்தமிழர் பயன்படுத்திய தமிழிசை கருவிகள் !

May 20, 20223 Mins Read1,024 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழிசையில் ஐந்து வகைக் கருவிகள் உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தோல்கருவி (தோலால் செய்யப்பட்டவை), துளைக்கருவி (துளையிடப்பட்டவை), நரம்புக் கருவி (தந்தி அல்லது கம்பிகள் பொருத்தப்பட்டவை), மிடற்றுக்கருவி (வாய்ப்பாட்டு), கஞ்சகருவி (சேகண்டி, ஜாலரா போன்ற தட்டுக்கருவிகள்).

தமிழ் இசையில் புல்லாங்குழல், யாழ், தோலிசைக் கருவிகள் பிரபலமானவை. அவற்றில் அழிந்துவிட்ட, அரிய சில கருவிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

யாழ்

பண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் யாழ் என்ற கருவியோ, யாழ் போன்ற தந்தி அல்லது கம்பி இசைக் கருவியோ இருந்துள்ளது.

கிரேக்க பாரம்பரியத்தில் இதைக் காணலாம். தமிழகத்திலும் ஒவ்வொரு திணைக்கும் தனித்தனி யாழ் இருந்திருக்கிறது. இன்று அந்தக் கருவி இல்லை.

பொதுக் காலம் (கி.பி.) 10ம் நூற்றாண்டில் இந்தக் கருவி மறைந்து ருத்ர வீணை, கின்னாரி, கச்சபி, பின்னர் சிதார், சாரோட், சரஸ்வதி வீணை போன்றவை பிரபலம் ஆகின. சீரியாழ் என்பது வீணை போன்ற ஒரு கருவிதான்.

யாழ் எப்படி இருந்தது என்று தெரியாவிட்டாலும், யாழ் போன்ற சில கருவிகள் இன்னும் எஞ்சியுள்ளன. அவற்றில் இரண்டு யாழ்களை இங்கே பார்க்கலாம். இது வில் யாழ். பார்ப்பதற்கு வில்லைப் போல் இருப்பதால் அப்பெயர் பெற்றது.

யாழ் கருவியின் நவீன வடிவம் மயில் யாழ். கம்பி இசைக் கருவிகளில் ஒன்றான இது, மயில் வடிவில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் அப்பெயர் பெற்றது.

சிறு கொம்பு

கொம்பு போன்ற இந்த இசைக் கருவிகள் காற்று கருவிகள். ஆங்கில எஸ் வடிவில் வளைந்த இந்தக் கருவிகள் நான்கு பாகங்களைக் கொண்டவை. இவற்றிலேயே பிறை போன்று வளைந்திருப்பவை கோயில் திருவிழாக்கள், கிராமத்து கொண்டாட்டங்கள் போது பயன்படுத்தப்படும்.

இதையும் படிக்க :  திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர் -நயினார் நாகேந்திரன்

சாதாரண மக்களின் கொண்டாட்டங்கள், துக்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் தாரை-தப்பட்டை, கொம்பு ஊதுவது வழக்கம். இன்றளவும் நாட்டார் தெய்வ திருவிழாக்களில் கொம்பு ஊதுவதைப் பார்க்கலாம்.

நகரா

பெரிய அரைவட்டச் சட்டி போன்ற தோலிசைக் கருவி. பழங்கால முரசைப் போலிருக்கும். கோயில்களின் முன் மரக்கதவுகளை அடுத்துள்ள பகுதிகளில் இந்தக் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும்.

கோயில் நிகழ்ச்சிகள், முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்களை தூரத்தில் இருப்பவர்களும் அறிவிக்க நகரா இசைக்கப்படுகிறது.

தாமிரம், பித்தளையால் ஆன அடிப்பகுதியில் தோல் இழுத்து கட்டப்பட்டு, இரும்பு சட்டத்தால் இறுக்கப்பட்டிருக்கும். வளைந்த குச்சிகளால் இசைப்பார்கள். சில நேரம் யானையின் மீது இந்தக் கருவியை வைத்து இசைத்துச் செல்வதும் உண்டு.

பஞ்சமுக வாத்தியம்

மிகப் பெரிய இசைக்கருவிகளில் ஒன்று என்று இதைக் குறிப்பிடலாம். தமிழகத்தில் இன்னும் ஓரிரு இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது. ஐந்து முகங்கள் கொண்ட இந்த தோலிசை கருவி கோயில்களில் பயன்படுத்தப்பட்டது.

வெண்கலத்தால் செய்யப்பட்ட இந்தக் கருவியை எடுத்துச் செல்ல சக்கரம் பொருத்திய இரும்புச் சட்டங்கள் இருக்கும்.

 

ஐந்து முகங்களில் தோல் இழுத்து கட்டப்பட்டிருக்கும். இதை வாசிப்பது தனிக்கலை. இந்தக் கருவியைப் பற்றி அருணகிரிநாதர் குறிப்பிட்டுள்ளார். குடபஞ்சமுகி என்ற வேறொரு பெயரும் உண்டு. இவற்றை இசைப்பவர்கள் பற-சைவர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.

இதையும் படிக்க :  மீண்டும் ஒன்று சேர்ந்த தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி !
வீணை

சிதாரை போன்றிருக்கும் இந்த (பால)சரஸ்வதி வீணை, மயிலின் அகவலைப் போல் ஒலியெழுப்பும். ஒலி மென்மையாக இருக்கும்.

இந்த வீணையின் வடிவமும் நின்று கொண்டிருக்கும் மயிலைப் போன்றிருக்கும். வயலினை இசைப்பது போல் ஒரு வில்லைக் கொண்டே இதை இசைக்க முடியும்.

இந்த வீணையின் தண்டுப் பகுதியை இடது தோளுக்கு நேராகப் பிடித்து, வலது கையால் வில்லைப் பிடித்து இசைக்க வேண்டும். இதற்கு மயூரி, மயில் சிதார், மயில் வயலின் என்றும் பெயர்கள் உண்டு.

நாகவீணை எனப்படும் இந்த வீணையின் சிற்பங்கள் புதுக்கோட்டை, கர்நாடக மாநிலம் பேலு£ரில் உள்ளன. வீணையின் அடிப்பகுதிகள் பாம்பின் தலை போல் செதுக்கப்பட்டிருக்கும்.

ஜலதரங்கம்

பல வெளிநாட்டு கருவிகள் நமது இசைக்கருவிகளாக மாறிவிட்டன. அப்படிப்பட்ட ஒரு கருவி ஜலதரங்கம்.

இதற்கு நீர் அலைகள் என்று பொருள். பெரியதிலிருந்து சிறிதாகும் வகையில் 18 பீங்கான் கிண்ணங்கள் இந்த கருவியை கட்டமைக்கின்றன.

 

இவற்றை அரைவட்ட வடிவில் அடுக்கி, தண்ணீரின் அளவை வரிசைகிரமமாக கூடுதலாகவோ, குறைவது போலவோ ஊற்ற வேண்டும்.

குச்சியால் அடித்து இசைக்கப்படும். காலி கிண்ணங்கள்கூட வித்தியாசமான அலைவரிசை ஒலியை எழுப்பும். வீட்டிலுள்ள பாத்திரங்களைக் கொண்டே இக்கருவியை நீங்கள் உருவாக்கலாம்.

 

ancient tamil music instruments featured History jaltharang lifestyle music nagara veena
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமெரினாவில் புகழ்பெற்ற காந்தி சிலை இடமாற்றமா? அதிர்ச்சியில் மக்கள்!
Next Article பின்னலாடை வணிகத்தின் வரலாறு மற்றும் வளர்ச்சி

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,546 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,035 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,546 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,035 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.