சமூகம்தமிழ்நாடு

ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்ததில் 3 மாத குழந்தை உயிரிழப்பு !

திருவண்ணாமலையில் ஸ்பீக்கர் பாக்ஸ் தவறி விழுந்ததில் 3 மாதக் குழந்தை உயிரிழந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் குடும்பத்தினர்

திருவண்ணாமலை அடுத்த பிச்சனந்தல் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் விஜய். 28 வயதான இவருக்கு பரணி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு அஸ்வின் என்ற மூன்று வயது ஆண் குழந்தையும், சுபஸ்ரீ என்ற மூன்று மாத பெண் குழந்தையும் இருக்கிறது.

ஸ்பீக்கர் பாக்ஸ்

கூலிவேலை செய்யும் விஜய் பெற்றோர், மனைவி இரண்டு குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அஸ்வினுக்கு உணவை ஊட்டி விட்டு திரும்பிய போது எதிர்பாராத விதமாக மேலே இருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் கீழே விளையாடிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை சுபஸ்ரீயின் தலையில் விழுந்தது. அதனால் அந்த குழந்தை மயங்கியது.

Small Baby

அவசர சிகிச்சை பிரிவு

எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் செய்வதறியாமல் பரணி கூச்சலிட்டு உள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்,  குழந்தையை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

3 மாத குழந்தை உயிரிழப்பு

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குழந்தை உயிரிழந்துள்ளது.
கண் இமைக்கும் நேரத்தில் மேலே இருந்து ஸ்பீக்கர் பாக்ஸ் குழந்தையின் தலையில் விழுந்தது விஜயின் குடும்பத்தினருக்கு ஏற்க முடியாத இழப்பாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். மேலும்,  காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 மாத குழந்தை உயிரிழந்த இந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Related posts