வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வரும் படம் விடுதலை. இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
விடுதலை
ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற நாவலை மையமாக வைத்து உருவாகும் படம். வெற்றிமாறன் இயக்கி வரும் இத்திரைப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஈரோடு, சத்தியமங்கலம் போன்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மேலும் படம் நீளமாக இருப்பதால் இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
விடுதலை படத்தின் பணிகள் முடிவடைந்த பிறகு வெற்றி மாறன் வாடிவாசல் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.