திருப்பூரில் ஆற்றில் அடித்து வரப்பட்ட பிறந்து ஒரு சில நாட்கள் ஆனா குட்டியானையை மீட்டு தாய் யானையிடம் சேர்த்த கேரளா வனத்துறையினர்.
குட்டி யானை மீட்பு
உடுமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட சின்னாறு வனப் பகுதியில் தமிழக மற்றும் கேரள எல்லை இணைக்கும் பகுதி. இதன் அருகே மூன்று ஆறுகள் சங்கமிக்கும் கூட்டாறு இடம் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் காரணத்தினால் இங்கு உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு இந்த ஆற்றில் பிறந்து ஒரு சில நாட்களான குட்டியானை ஒன்று தண்ணீரில் அடித்து வந்தது. இதனை அறிந்த கேரள மாநில வனத்துறையினர் உடனடியாக அங்கு சென்று பல மணி நேரம் போராடி ஆற்றில் இருந்து குட்டி யானையை உயிருடன் மீட்டனர். மனிதர்களைக் கண்டு சிறுது அஞ்சிய யானை குட்டி அவர்களுடன் செல்ல மறுத்து கத்தி அடம்புடித்தது . இதனைத் தொடர்ந்து பல போராட்டங்களுக்குப் பிறகு குட்டி யானையை அழைத்துச் சென்று தாய் யானை இருந்த கூட்டத்தின் வனப்பகுதியின் அருகில் விட்டனர். அந்த யானை குட்டி தாய் யானைவுடன் இணைந்து அங்கிருந்து சென்றது.

