மும்பை: மும்பையில் மொபைல் ஆப் மூலம் கடன் வாங்கியதாக கூறி சித்ரவதை செய்தால் வாலிபர் ஒருவர் தற்கொலை. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொபைல் அப்ளிகேஷன்
மும்பை மலாடு குரார் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் கோரேகாவ்கர். 38 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். ஆன்லைன் மூலம் கடன் வாங்கும் மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை பதிவிறக்கம் செய்திருக்கிறார். இந்நிலையில் அந்த ஏஜெண்டுகள் அவர் கடன் வாங்கி இருப்பதாகக் கூறியிருகிறார்கள். அதற்கு சந்தீப் தான் கடன் எதுவும் வாங்கவில்லை என்று மறுத்திருக்கிறார். அதனையடுத்து அந்த ஏஜெண்டுகள் வாங்காத கடனை கேட்டு அடிக்கடி போன் செய்ய ஆரம்பித்தனர். கடன் வாங்கவே இல்லை என்று எவ்வளோவோ சொல்லியிருக்கிறார். கடைசியில் சந்தீப் தனது சிம்கார்டைக்கூட மாற்றியிருக்கிறார், இருந்தும் அந்த கடன் வசூலிப்பு ஏஜெண்டுகள் விடவில்லை.
தகவல்கள் திருட்டு
சந்தீப்பின் மொபைலில் இருந்து தகவல்களை, அவருக்கே தெரியாமல் திருடியிருக்கிறார்கள். சந்தீப் ஒரு பெண்ணுடன் இருப்பது போன்று ஆபாசமாக மார்பிங் செய்து, மொபைலில் இருக்கும் அவரது உறவினர்கள் எண்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள் அந்த ஏஜெண்டுகள். இதுகுறித்து சந்தீப் காவல் துறையில் புகாரளித்தார். ஆனால் போலீஸ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வாலிபர் தற்கொலை
இந்த நிலையில் அந்த ஏஜெண்டுகள் சந்தீப் நண்பர்களிடம் சந்தீப் போன்று பேசி, தான் கடன் வாங்கிருந்ததாகவும், அதை திருப்பி தரமுடியவில்லை என்றும், எனவே பணம் கொடுத்து உதவுமாறும் கேட்டு இருக்கிறார்கள். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சந்தீப் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தீப் சகோதரர் தத்தா குருவிடம் முதல்கட்டமாக விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். ஏஜெண்டுகள் போன் செய்த எண்களை வைத்தும் தீவிரமாக தேடிக் வருகிறார்கள்.
இது குறித்து சந்தீப் போலீசாரில் புகாரளித்த போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் சந்தீப் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. காவல் துறையினரின் இந்த மெத்தனப் போக்கை பலரும் கண்டித்து வருகிறார்கள்.