திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் நேற்று இணைந்தார்.
தமிழக பாஜக
தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற பல முயற்சிகளை செய்து வருகிறது. தமிழகத்தில் பல செல்வாக்கு உள்ள அரசியல் பிரமுகர்களை பாஜக தன் பக்கம் இலுத்து வருகிறது. எல். முருகன் தமிழக பாஜக தலைவராக இருந்தபோது அதிமுக திமுக போன்ற கட்சிகளில் இருந்த முக்கிய பொறுப்பாளர்கள் பாஜகவில் இணைந்தார்கள். அண்ணாமலை தலைவரானப் பிறகு பெரிதாக யாரும் சேரவில்லை என ஒரு கருத்து பாஜகவில் எழுந்தது.
திமுக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினராக திருச்சி சிவா உள்ளார். இவர் திராவிட கொள்கைகளை மாநிலங்களவையில் மிக கடுமையாக எடுத்துரைக்க கூடியவர். சமீபகாலமாக காலமாக திருச்சி சிவாக்கும் அவரது மகன் சூர்யா சிவாவுக்கும் திமுகவில் எந்த ஒரு முக்கிய பொறுப்புகளும் தரப்படவில்லை என சூர்யா சிவா அதிருப்தியில் இருந்து வந்துள்ளார்.
அண்ணாமலை தலைமையில்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று (மே 8) சூர்யா சிவா அவர்கள் பாஜக இணைந்தார். அவருக்கு பாஜகவின் சார்பாக அண்ணாமலை மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் சார்பாக கமலாலயத்தில் சால்வை போட்டு வரவேற்றனர். இதுகுறித்து அவர் கூறுகையில் தமிழகத்தில் பாஜக வரும் காலத்தில் ஆளும் கட்சியாக வரும் என்ற நம்பிக்கையுள்ளது என்றார்.
திமுக குடும்ப கட்சி
மேலும், திமுக சில குடும்பங்கள் வாழ்வதற்கான கட்சி. அதில் முதல்வர் மகன், மருமகன், கனிமொழி என உட்கட்சி பூசல் உள்ளது. தனது தந்தையும் திமுக மீது அதிருப்தியில் உள்ளார். திமுகவில் 15 ஆண்டுகள் உழைத்து இருக்கிறேன். ஆனால் எனக்கு பொறுப்புகள் கேட்டும் தரவில்லை. மக்களுக்காக உழைக்கவேண்டும் என்றும் பதவி வேண்டும் என்றும் பாஜகவிற்கு வரவில்லை உழைப்புக்கான அங்கீகாரத்தை பாஜக தரும் என்று நம்புகிறேன். என் அப்பா என்னை ஏற்று கொள்ளவில்லை என்றாலும் தலைவர் அண்ணாமலை என்னை ஏற்று கொண்டுள்ளார். பாஜகவில் சேருவதில் உறுதியாக இருந்ததால் கனிமொழி அவர்கள் தொலைப்பேசி அழைப்பை எடுக்கவில்லை என அவர் கூறினார்.