அதிமுகவை அழித்து ஒழிக்க பாஜக திட்டமிட்டு செயல்படுவதாக எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற பயிற்சி கூட்டத்தில் அதிமுகவின் முன்னாள் எம்.பி பொன்னையன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக
அதிமுக உடனே கூட்டணிக்கு முன் தமிழ்நாட்டில் பாஜக நடத்தும் கூட்டத்திற்கு பெரியளவில் மக்கள் பங்கேற்கமாட்டார்கள். காலி இருக்கைகளுடன் முன்னாள் பாஜக தலைவர்கள் பேசும் காட்சிகள் சமூக வலைதளைங்களின் வெளியாகி விவாதத்திற்கு உள்ளாகும். ஆனால் அண்மை காலமாக பாஜக நடத்தும் பொதுகூட்டத்திற்கு மக்கள் கூடுவது அதிகரித்து வருவது தமிழக அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சட்டமன்ற தேர்தல் அதிமுக கூட்டணி
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை பறிகொடுத்தாலும் கூட்டணிக்கு 75 இடங்கள் கிடைத்தன. சட்டமன்றத்தில் அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டுவருகிறது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஒரு கட்சிக்கு இந்த அளவிற்கு எண்ணிக்கை கிடைத்தது ஒன்றும் சறுக்கல் இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதன்பிறகு அதிமுக கட்சி பெரியளவில் போராட்டங்களோ, ஆளும் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளோ முன்னெடுக்கவில்லை.
அதிமுகவின் செயல்பாடுகள்
லஞ்ச ஒழிப்புத்துறையால் போடும் வழக்குகளில் யார் சிக்கப்போகிறார்களோ என்ற விவாதம், கொடநாடு கொலை வழக்கில் அதிமுகவின் முக்கிய பொறுப்பாளர்கள் சிக்குவார்கள் என்ற விவாதமும், மேலும் சசிகலா முக்கிய பிரமுகர்களை தன் பக்கம் வளைத்துவிடுவாரோ என்று காரணங்கள் அதிமுகவை சைலண்ட் மோடுக்கு கொண்டு சென்றுள்ளது. இதன் விளைவாக சட்டமன்றத்தில் 66 அதிமுக உறுப்பினர்களை ஓரங்கட்டி பாஜகவை சேர்ந்த 4 எம் எல் ஏக்கள் அரசியல் செய்து வருகின்றனர்.
எம்.ஜி.ஆர் பயற்சி கூட்டம்
ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான பொன்னையன் பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ‘தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர் பயற்சி கூட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று கலந்துகொண்டார். அப்போது பேசிய பொன்னையன் அதிமுகவை அழித்து ஒழித்துவிட்டு பாஜக தமிழ்நாட்டில் வளர பார்க்கிறது’ என்று கூறியுள்ளார்.
அதிமுக பொன்னையன்
‘பாஜக அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும், அதிமுக எப்பொழுதும் திராவிட கொள்கையிலேயே பயணிக்கிறது. தமிழகத்தில் அவர்கள் வளர்வது அதிமுக மற்றும் தமிழக மக்கள் நலனுக்கு நல்லதில்லை. பாஜக தமிழக உரிமைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். காவேரி நதிநீர் மற்றும் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போட்டுவருகிறது. இதனை அதிமுக ஐ.டிபிரிவினர் சமூக வலைத்தளங்களில் அம்பலபடுத்தவேண்டும் ‘ என்று கூறினார்.
அதிமுக ஜெயக்குமார்
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, ‘அதிமுக களத்தில்
செயல்படாதது போல் ஒரு பிம்பத்தை உண்டாக பார்க்கிறார்கள். அதிமுக மக்கள் பணியை தொய்வில்லாமல் செய்து வருகிறோம். அதேபோல் பாஜக அவர்களது பணியை செய்து வருகின்றனர். என்றைக்கும் திமுக ஒரு தீய சக்தி என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என்று ஜெயகுமார் கூறியுள்ளார்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளது அதிமுக பாஜக கூட்டணியில் என்ன மாதிரியான குழப்பத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து பார்ப்போம் .