அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்கள் அதிகரித்துள்ளது.
மாணவர் சேர்க்கை
கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் ஏற்பட்டு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம், வேலையின்மை, வருவாய் இழப்பு ஏற்பட்டன. வேலையின்றி வீடுகளில் முடங்கிய கூலி தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் ஊழியர் தங்களின் குழந்தைகளை தொடர்ந்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 20 லட்சம் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 72 லட்சமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.