சினிமாமருத்துவம்

இயக்குனர் பாரதிராஜா விரைவில் குணமடைய வேண்டும் – நடிகை ராதிகா பிரார்த்தனை !

மருத்துவமனையில் அனுமதி 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக கொடிக்கட்டி பறந்தவர் பாரதிராஜா. 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை போன்ற பல படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார். இதனிடையே கடந்த 23ம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் பாரதிராஜா சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரார்த்தனை

இந்நிலையில், அவரின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ராதிகா சரத்குமார், இயக்குனர் பாரதி ராஜா விரைவில் குணமடைய வேண்டி பிரான்ஸ் நாட்டில் உள்ள சர்ச் ஒன்றில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்துள்ளார்.

Related posts