அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தனது தேர்தல் வாக்குறுதியாக கல்விக்கடன் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்
மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்ற கடந்த 2020ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். இந்நிலையில், 1 லட்சத்து 25 ஆயிரம் டாலருக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர்(8 லட்சம்) வரையிலான கல்வி கடன், ரூபாய் ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவித்திருந்தார். குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு அவர்களது கல்வி கடன் 20 டாலர் (16 லட்சம்) ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று பைடன் கூறியுள்ளார். இதுவரை 20 ஆண்டுகளுக்குளே கல்விக்கடன் கட்டி முடித்தவர்களுக்கே இந்த சலுகை வழங்கப்பட்டது என அரசு அறிவித்துள்ளது.