மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் தலைவராக சமீர் வி காமத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சமீர் வி காமத்
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் தலைவராக சதீஷ் ரெட்டி பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கின் அறிவியல் ஆலோசகராக சதீஷ் ரெட்டி நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக டி.ஆர்.டி.ஓவின் புதிய தலைவராக சமீர் வி காமத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கூடுதலாக அந்த துறையின் செயலாளராகவும் அவர் பதவி வகிப்பார் என கூறியுள்ளது.
இவர் 1985ம் ஆண்டு, ஐ.ஐ.டி. காரக்பூரில் உலோகவியல் பொறியியல் படித்து உள்ளார். 1989ம் ஆண்டு விஞ்ஞானியாக ஐதராபாத்தில் உள்ள டி.ஆர்.டி.ஓ அமைப்பில் இணைந்து பணியாற்றினார். அதன்பின், அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறி, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி டி.ஆர்.டி.ஓ.வின் நேவல் சிஸ்டம்ஸ் மற்றும் மெட்டீரியல்சின் இயக்குனர் ஜெனரலாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

