சமூகம்சினிமா

ஜெய்பீம் படத்திற்கு எதிராக காப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு !

ஜெய்பீம் படம்

காவல்துறை சித்ரவதையில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் வழக்கை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட’ஜெய்பீம்’ படத்திற்கு எதிராக அந்த வழக்கின் பாதிக்கப்பட்ட கொளஞ்சியப்பன் என்பவர் தங்களது வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை, தங்கள் அனுமதி இல்லாமல் படமாக்கி இருப்பதாக
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 26-ம் தேதிக்குள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது.

‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘2 டி’ எண்டர்டைன்மென்ட்ஸ் மீது சென்னை சாஸ்திரி நகர் காவல்துறையினர் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

Related posts