ஓடிடி ரிலீஸ்
8 தோட்டாக்கள் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் திரையரங்கில் வெளியான படம் ‘குருதி ஆட்டம்’. பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இத்திரைப்படம் சில காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், ‘குருதி ஆட்டம்’ திரைப்படம் நாளை “ஆஹா” ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இவ்வளவு சீக்கிரம் ஆட்டம் ஆரம்பிக்கும்னு எதிர் பாக்கலைல 🔥#KuruthiAattam – Premieres Aug 26th on @ahaTamil #aha100PercentTamil @Atharvaamurali @priya_Bshankar @iamkannaravi @realradikaa @Vatsanhere @thisisysr @sri_sriganesh89 @ash_raghavan @Rockfortent @kbsriram16 @proyuvraaj pic.twitter.com/jOwqXc3L0r
— aha Tamil (@ahatamil) August 24, 2022