தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் சேர்ந்து பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நயன்தாரா ஆரம்பம்
தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. ஆரம்ப காலத்தில் கடுமையாக விமர்சிக்க பட்டாலும் தனது கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். பில்லா போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் தற்போது உடல் இடையை குறைத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
லேடி சூப்பர் ஸ்டார்
படிபடியாக உயர்ந்து தமிழில் முதன்மையான கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். இதனால் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருகிறார். மேலும், நடிகைகளிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார். அவர் தற்போது மோகன் ராஜா இயக்கும் காட் ஃபாதர் என்ற தெலுங்கு படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்து வருகிறார். அதன்பிறகு விக்னேஷ் இயக்கத்தில் அஜித் 62 படத்தில் நடிக்கவிருக்கிறார். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் இது.
காதல்
விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடித்தார். முதலில் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவியது அதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஜோடியாக பயணம் மேற்கொண்டு வந்தனர். மேலும், அங்கு புகைப்படங்கள் எடுத்து சமூக வலையதளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
திருப்பதி தரிசனம்
இதனிடையே இருவரும் இரண்டாவதாக இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் பணியாற்றினார்கள். இந்த படம் கடந்த மாதம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படம் வெளியானதும் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்பட்டது. இதன்தொடர்ச்சியாக கடந்த மாதம் இருவரும் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்தனர்.
திருமணம்
இதனால் அவர்களின் திருமணம் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடக்கவிருக்கிறது என்று முதலில் கூறப்பட்டது. அதன் பிறகு இணையத்தில் இவர்களது திருமண அழைப்பிதழ் ஒன்று வெளியானது. அதில் மகாபலிபுரத்தில் திருமணம் என்பது தெரிய வந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் திரைத்துறையில் இருந்து விஜய் சேதுபதி, இயக்குநர் நெல்சன் திலீப்குமார், சமந்தாவுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
விஜய், அஜித் வருகை
இதனையடுத்து நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், அஜித், விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா தமிழின் முன்னணி நடிகர்களான அஜித், விஜயுடன் இணைந்து நடித்திருக்கிறார். அது மட்டுமின்றி விக்னேஷ் சிவன் அடுத்து அஜித்தை வைத்து தான் படம் எடுக்கவிருக்கிறார். அதனால் கண்டிப்பாக விஜய், அஜித் இருவரும் திருமணத்திற்கு வருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் அஜித்தையும், விஜய்யையும் ஒரே மேடையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.