தமிழ்நாடு

சென்னை போர்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் !

மறைமலைநகரில் இயங்கி வரும் போர்ட் நிறுவனத்தில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தொடங்கவுள்ள நிலையில் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மறைமலைநகரில் போர்ட்

உலகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல போர்ட் மோட்டார்ஸ் இயங்கி வருகிறது. இந்தியாவில் 5 ஆண்டுகளாக போர்ட் மோட்டார்ஸ் வாகன விற்பனை மந்தமாகவுள்ளது. இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் போர்ட் நிறுவனம் 20வது ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அங்கு நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என 5500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறனர். இதைபோல் குஜராத் மாநிலம் சனந்த மாவட்டத்தில் போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலை இயங்கி வருகிறது.
இந்த ஆலை கடந்த 10 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருவதால் இதுவரை 14 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் உள்ள இரண்டு ஆலையை மூடுவதாக போர்ட் நிறுவனம் முடிவு செய்தது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம்

குஜராத்தில் உள்ள போர்ட் நிறுவனத்தை டாடா குழுமம் விலைக்கு வாங்க முன்வந்துள்ளது. ஏற்கனவே உள்ள தொழிலாளர்கள் யாரையும் வேலையை விட்டு நிறுத்தப்போவதில்லை என மாநில அரசிடம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள் போராட்டம்

ஆனால் மறைமலைநகரில் உள்ள ஆலையில் எலக்ட்ரிக் வாகனகளை தயரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய வாகன தயாரிப்பு செயல்முறை குறித்து தொழிலாளிகளுக்கு அறிவுரை வழங்கப்படும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் தொழிலாளர்களை அழைத்து செட்டில்மென்ட் குறித்து பேசியதால் ஊழியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கண்டித்து ஊழியர்கள் ஆலை உள்ளாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆலைக்குள் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts