தமிழ்நாடுபயணம்

பாம்பன் பாலத்தில் வாகன விபத்து; மீனவர் உயிரிழந்தார்!

ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் சிவகங்கை செல்லும் வழியில் கார் ஒன்று தன்   கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் வாகனகள் நேருக்கு நேர் மோதியதில் மீனவர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதியத்தியது.

கட்டுப்பாட்டை இழந்த கார்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவர் தனது காரில் குடும்பத்தினருடன் சேர்ந்து ரமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றிருந்தார். தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு செல்லும் வழியில், தனக்கு முன்னால் சென்ற காரை முந்த வேண்டும் என்று வேகமாக சென்றிருக்கிறார். அதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதியது. அதில் நாராயணன் என்பவர்  சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். அவருடன் வந்த ஹரிமுகேஷுக்கு பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்துக்குள்ளான நாராயணன், ஹரிமுகேஷ் இருவரும் மீனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து

இருசக்கர வாகனம் மோதியதில், பின்னால் அமர்ந்து வந்த ஹரிமுகேஷ் கடலில் விழுந்து விட்டார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கயிறு மூலம் மீட்டு, இருவரும் மண்டபம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். பின்னர் அவர்கள் தீவிர சிகிச்சைக்காக மீண்டும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் நாராயணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஹரிமுகேஷுக்கு இரண்டு கால்களும் உடைந்து விட்டது.

ராமேஸ்வரம் பாலத்தில் பயங்கர விபத்து.. கார் மோதியதில் 2 சக்கர வாகன ஒட்டி கடலில் பறந்து விழுந்ததால் பேரதிர்ச்சி.! - TamilSpark

 

ஓட்டுனர் மீது வழக்கு பதிவு

அந்த விபத்தில் கார் போஸ்ட் மரத்தில் மோதி நின்றதால், காரில் பயணம் செய்த 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதில் 2 குழந்தைகளும், பெண்களும் இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் மண்டபம் காவல் துறையினர் காரை ஓட்டிய கருணாமூர்த்தியை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில் நாராயணன் ராமேஸ்வரம் கடற்கரைக்கு படகை சீர் செய்ய சென்றபோது தான் விபத்துக்குள்ளாகி இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உயிரிழந்த நாராயணன் மற்றும் தனது இரண்டு கால்களை பறிகுடுத்த ஹரிமுகேஷ் ஆகியோர் குடும்பத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.  படகுகளை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு மீனவர்களின் விபத்து அப்பகுதி மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts