தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோவை 18 வயது மகள் படம்பிடித்து, நீதி கேட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
பீகார் மாநிலம்
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் 50 வயது முதியவர் ஒருவர் தனது மகளை பலாத்காரம் செய்யும் வீடியோ வைரலானதை அடுத்து கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் சமஸ்திபூரில் உள்ள ரோசெராவில் வசிப்பவர் மற்றும் தொழிலில் ஆசிரியராக உள்ளார்.
அவர் தன்னை கற்பழித்து மிரட்டியதாக அவரது 18 வயது மகள் குற்றம் சாட்டினார். அவர் தனது தந்தையின் செயலை அம்பலப்படுத்த அறையில் மறைக்கப்பட்ட கேமராவைப் பயன்படுத்தி, அவர் தன்னை தாக்கும் வீடியோவை படம் பிடித்துள்ளார். மேலும், நீதி கேட்டு சமூக ஊடகங்களில் விடியோவை பகிர்ந்துள்ளார்.
எஃப்ஐஆர்
இந்த வீடியோ வைரலானதால், மகளின் புகாரின் அடிப்படையில் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து, தந்தையை கைது செய்ததாக ரோசரா துணைப்பிரிவு டிஎஸ்பி சாஹியர் அக்தர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் அவரது புகாரில் மேலும் சில நபர்களின் பெயரை குறிப்பிட்டுள்ளதால் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்ப்பு உள்ளதா என விசாரணைகளும் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன” என்று டிஎஸ்பி சாஹியர் அக்தர் இவ்வாறு கூறினார்.
தாய் தடுக்கவில்லை
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தனது மகள் பலாத்காரம் செய்யப்படுவதை தடுக்கவில்லை என்றும், இச்சம்பவம் குறித்து அமைதியாக இருக்குமாறு அவரது தாய் மாமா அவருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
போலீசார் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியிலும் சமூகவலைத்தளங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.