2 மாதங்களுக்கு பிறகு வீடு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது.
பொருளாதார தடை
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடு ரஷ்யா. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் காரணமாக பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. இந்த பொருளாதார தடை காரணமாக கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தது.
உணவுப்பொருள்களின் விலை உயர்வு
பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை 110 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்த நிலையில் தற்போது எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அத்தியாவசிய பொருட்களின் அதிரடி விலை உயர்வால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உணவகம், பேக்கரி, உள்ளிட்ட தொழில் நடத்தும் வியாபாரிகள் உணவுப்பொருள்களின் விலையை உயர்த்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
படிப்படியாக உயர்ந்த விலை
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர் விலை 710 ஆக இருந்தது. பின்னர் அக்டோபர் மாதம் 915.50 ரூபாயாக உயர்ந்தது. மீண்டும் மார்ச் மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 965 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டது. இதனையடுத்து, தற்போது 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1015 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் எரிவாயு சிலிண்டரின் விலை 5 மாதங்களில் 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 17 மாதங்களில் 315 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இல்லாதரசிகளின் வேதனை
ஏற்கனவே சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், விலையோ தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.