சினிமா

விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு காத்து வாக்குல ஒரு திருமணம் !

விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி கடந்த 6 வருடகளாக காதலித்து வருகிறார்கள். அவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் வரும் ஜூன் 9ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

காதலின் ஆரம்பம்

‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்த படத்தின் தோல்விக்கு பிறகு கடந்த 2015ம் ஆண்டு விஜய் சேதுபதி நயன்தாராவை வைத்து ‘நானும் ரௌடி தான்’ என்ற படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். அந்த படத்தில் அவருக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

வெளியூர் பயணம்

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கு புகைப்படங்களை எடுத்து சமூக வலையதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். நயன்தாராவின் கேரளா வீட்டிற்கும் சென்று வந்தனர். இதனால் இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதாக வதந்திகள் பரவ தொடங்கியது.

விக்னேஷ் சிவன் பேட்டி

விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். பின்பு இந்த படத்தை பற்றி பேட்டி ஒன்றில் கூறிய விக்னேஷ் சிவன் இந்த படம் எனக்கும் நயன்தாராவுக்கும் கனவு படம் என்றும், படம் வெளியான பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று பேசியதாகவும் கூறினார். இதனையடுத்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைக்கு வந்த நிலையில் இருவரின் திருமணம் எப்போது என்பதை குறித்து ரசிகர்கள் சமூக வலையதளங்களில் கேள்வி எழுப்பி வந்தார்கள். இருவரும் பதில் எதுவும் சொல்லாமல் மௌனம் காத்து வந்தனர்.

திருமணம்

இருவரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் வெளியானதை தொடர்ந்து திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இதனையடுத்து விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் வருகிற ஜூன் 9ம் தேதி  திருப்பதியில் திருமணம் செய்துகொள்ளப்  போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், திருப்பதியில் தங்களது திருமண ஏற்பாடுகளை அவர்களே பார்வையிட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

 

Related posts