தமிழகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு. அதில் உள்ள நிறைகள் குறைகள் ஓர் அலசல் பார்வை.
தமிழகத்தில், கடந்த ஆண்டு 2021னில் தனிபெரும்பான்மையுடன் திராவிட முன்னேற்ற கழகத்தின், தலைவர் மு.க. ஸ்டாலின் ஆட்சி அமைத்தார்.
தேர்தல் வாக்குறுதிகள்
கொரோனா நெருக்கடி காலத்தில் பதிவி ஏற்ற முதல்வர் முக்கியமாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தமிழகத்தில் சாதாரண பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணமில்லா பயண திட்டம். இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
ஆவின் பால் வேலை 3 ரூபாய் குறைப்பு, ரேஷன் அட்டை குடும்பத்தார்களுக்கு கொரோனா கால நிதியாக சுமார் ரூபாய் 4000 அறிவிக்கப்பட்டு முதல் தவணையாக பொங்கலுக்கு 2 ஆயிரம் ரூபாய் 21 வகையான பொங்கல் பொருட்களும், 2 தவணையாக மே மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின் 100 நாள்’ திட்டதிற்கு குழு அமைத்தது.
தேர்தல் அறிக்கையில் கூறியது போல வேளாண் துறைக்கு என ‘தனி பிட்ஜெட்’ தாக்கல் செய்தது மற்றும் பயிர்க்கடன் திட்டம் விவசாயிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.
முதியோருக்கு இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டம். இல்லம் தேடி கல்வி திட்டம், தமிழ் இலக்கியத்தில் சிறப்பு பெற்றவருக்கு இலக்கிய மாமணி விருது, தகைசால் தமிழர் விருது மற்றும் கனவு இல்லம் அமைக்கப்படும் என கூறினார் .
அர்ச்சகர்களுக்கு கொரோனா பெற்றிடர் நிதியாக 4 ஆயிரம் ரூபாய், அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொடங்கிவைத்தார். தமிழகத்தில் முதல் முறையாக கோவில்களில் 58 தமிழ் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், நியமனம் செய்தார். அதில் 5 நபர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள்.
மின்சார துறையில் “இலவச மின் இணைப்பு திட்டம்” மூலமாக 1 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர்.
தொழில் துறையில் முலமாக தமிழகத்தில் “முதலீட்டாளர்கள் மீட்டல் முகவரி மாநாடு” நடத்தி சுமார் 68,375 கோடிக்கு தொழில் மூலமாக 2 லட்சத்து 5 ஆயிரத்தி 802 நபர்களுக்கு வேலை வாய்ப்பு. 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என கடந்த ஓராண்டு செயல்பாடுகள் இருந்தன.
சென்னையில் உள்ள அண்ணா நூலகம் போல மதுரையில் கலைஞர் பெயரில் 2 லட்சம் சதுர அடியில் நூலகம் ஓராண்டுக்குள் திறக்கப்படும் கூறினார்.
சர்ச்சைகள்
மகளிற்கு இலவச பேருந்து பயணத்தில் திருநங்கைகள், உடல் ஊனமுற்றோர் சேர்க்க வேண்டும் என சர்ச்சைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து அவர்களது பெயர் சேர்க்கபட்டு அறிவிப்பு வெளியிட்டனர்.
பயிர்கடன் பெற்றவருக்கு நகைக்கடன் திட்டத்திம் இல்லை என செய்தி வந்ததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்த திமுக. தங்கள் ஆட்சியில் டாஸ்மாக் கடைகளை மூடாமல் இருந்தது தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளும் கட்சியை சார்ந்த சிலர் பொதுமக்கள் மீது தாக்குதல், பல இடத்தில் திமுகவினர் அராஜகப்போக்கு மற்றும் அரசு ஊழியர்கள் மீது தாக்குதல். முக்கியமாக திருவெற்றியூர் எம்.எல்.ஏ சங்கர் அவர்கள் நெடுஞ்சாலைத்துறை ஊழியரை தாக்கியது.
போக்குவரத்து துறை எம்.எல்.ஏ ராஜகண்ணப்பன் பட்டியலின ஆர்.டி.ஓவை சாதியை சொல்லி திட்டியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஓராண்டாக பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில், 22 வயது பெண்னை ஒரு வருட காலமாக தொடர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் திமுகவை சார்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் மகன் மற்ற நண்பர்களை கைது செய்யவேண்டும் என தமிழ்நாடு முழுக்க பொது மக்கள் குரல் எழுப்பினர்.
லாக்கப் டெத்
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் காவல் நிலைய கஸ்டடி மரணங்கள். சுமார் ஓராண்டுக்குள் 6 நபர்கள் மரணித்துள்ளார். அதில் உள்ள சில முக்கிய மரணங்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் மணிகண்டன் என்ற இளைஞர் காவல் துறையால் மிக கொடூரமாக தாக்கப்பட்டார். பின்பு காவல் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு சென்ற சில மணி நேரங்களில் உயிரிழந்தார்.
சென்னையில் விக்னேஷ் காவல் துறையால் அடித்து கொல்லப்பட்டு கிருஷ்ணாபேட்டை மையனத்தில் புதைத்தனர். அவ்வழக்கு தற்போது தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த தங்கமணி என்பவர் விசாரணைக்கு அழைத்து சென்று அவரும் பிணமாகத்தான் வீடு திரும்பினார்.
சென்னையில் ஒன்பது போலீசாரல் 22 வயது சட்ட கல்லூரி மாணவன் ரஹிம் மிக கடுமையாக தாக்கப்பட்டார். அவர் தாக்கப்பட்ட வீடியோ சமூகவலை தளத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்வலையை எற்படுத்தியது.
நடைமுறைப்படுத்ததா தேர்தல் அறிவிப்பு
அதிமுக ஆட்சியின் போது எட்டு வழிசாலை திட்டத்தை எதிர்த்து போராடிய திமுக கட்சி. இன்று அதே திட்டத்திற்கு விரைவு சாலை என்று பெயரிட்டு அதற்கான வேலைகளை துரிதப்படுத்துகிறது. இந்த செயல் மக்களை மிகவும் ஏமாற்றம் அடைய செய்து இருக்கிறது.
மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை.
அதைபோல், நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய், கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய் என்ற தேர்தல் வாக்குறுதி இன்று வரை அமல்படுத்தவில்லை.
அதிமுக முன்னால் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றனர். அதற்கான எந்த அறிவிப்பையும் அரசு அறிவிக்கவில்லை
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடைபெறும் சமூக வலைதள குற்றங்களை தடுக்க சைபர் கிரைம் காவல் நிலையம் திறக்கப்படும் என்றனர் . தொழில் துறை உள்ள வேலைகளில் 75% தமிழர்களுக்கு என்ற அறிவிப்பு.
மீனவ சமுதாயத்தை பழங்குடினர் பட்டியலில் சேர்த்து அனைவருக்கு பிரநிதுத்துவம் வழங்கபடும் என அறிவித்தனர்
அனைத்து மாவட்டத்திலும் குறை கேட்கும் மையம் அமைக்கப்படும் என இப்படி பல வாக்குறுதிகள் இன்னும் கிடப்பில் தான் போட்டுள்ளது இந்த திமுக அரசு.
இந்த ஒரு வருடகாலம் மக்களின் சில பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்து இருந்தாலும். பல குற்ற செயல்கள், அராஜங்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மெத்தன போக்கு என எல்லாம் அதிகமாகியுள்ளதாக மக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகிறார்கள்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த குறைகளையும் வருங்காலங்களில் சரி செய் வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசு சரி செய்யுமா? என்ற கேள்விக்கு, இனி வரும் 4 ஆண்டு ஆட்சி காலமே அதற்கு பதில்!
.