விளையாட்டு

மே 7 உலக தடகள தினம்!

சர்வதேச தடகள மன்ற கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மே 7 ஆம் தேதியை உலக தடகள தினமாக கொண்டாடி வருகிறது.

விளையாட்டுத்துறை

மருத்துவத்துறை, கல்வித்துறை முதலிய துறைகளின் வரிசையில் விளையாட்டுத்துறையும் மிக முக்கியமான ஒரு துறையாகும். இன்று கல்வித்துறையில் சாதிக்க முடியாத பலர் விளையாட்டுதுறையில் பெரிய அளவில் சாதனைகளை படைத்தது வருகின்றனர். அத்தகைய விளையாட்டுத்துறையில் தடகள விளையட்டுகள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன.

தடகள வரலாறு

தடகள தினம் முதன் முதலில் 1996 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. சர்வதேச தடகள மன்ற கூட்டமைப்புகளின் (IAAF) முன்னாள் தலைவரான பிரைபோ நெபிலோ சர்வதேச தடகள தினத்தை முதன் முதலாக தொடங்கிவைத்தார். குழந்தைகளிடத்தில் தடகள பங்கேற்பை ஊக்குவிப்பதர்க்காக 2003 இல் நியூபி தடகள கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

எளிமையானவை

தடகள மைதானத்தில் நடைபெறும் ஓடுதல், எறிதல், நடத்தல், தாண்டுதல் முதலியவை தடகள விளையாட்டுகளில் இடம் பெரும். பெரும்பாலும் தடகள விளையாட்டுகள் எளிமையான விளையாட்டுகளாக கருதப்படுகின்றன. தடகள விளையாட்டு பெரும்பாலும் தனிமனித போட்டியாகவே உள்ளது. தடை தாண்டும் ஓட்டம்,  விரைவோட்டம், மும்முறை பாய்தல், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், தடியூன்றிப்பாய்தல், பரிதி வட்டு எறிதல், சம்மட்டி எறிதல், ஈட்டி எறிதல், குண்டெறிதல் ஆகியவையும் தடகள விளையட்டுகளாகும்.

மாற்றுத்திறனாளிகளும் ஊக்குவிக்கப்படுகின்றனர்

மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கும் தடகளப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இன்று பல மாற்றுத்திறனாளிகள் தடகள போட்டிகளில் பங்கேற்று தடகள வீரர்களாக உலா வருகின்றனர்.

விழிப்புணர்வு

இன்று பள்ளி கல்லூரிகளிலும் தடகள விளையாட்டுகள் பெரிய அளவில் ஊக்குவிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்களிடையே விளையாட்டு குறித்த பொது விழிப்புணர்வு ஏற்படுகிறது.