பயணம்

அசத்தலான அமெரிக்க சுற்றுலா! – கலிஃபோர்னியாவில் கண்டு ரசிக்க வேண்டிய முக்கிய இடங்கள்!

அமெரிக்க நாட்டின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்று கலிஃபோர்னியா. இந்த மாகாணத்துக்கு கிடைக்கப்பெறும் ஆண்டு வருவாய் பாதிக்கு மேல் சுற்றுலா பயணிகளால் தான் சாத்தியமாகிறது.

உள்நாட்டு பயணிகளுக்கும் சரி. வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் சரி. கலிஃபோர்னியா என்றைக்குமே ஒரு சொர்க பூமியாகவே விளங்கியுள்ளது.

இப்படிப்பட்ட சொர்க்கபூமியில் சுற்றி பார்க்க எண்ணற்ற இடங்கள் உள்ளன. அவற்றுள் தலைசிறந்த ஐந்து இடங்களைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம் வாருங்கள்.

San Francisco and the Golden Gate Bridge :

அமெரிக்காவின் அழகிய நகரங்களில் ஒன்று சான் பிரான்சிஸ்கோ . கடலும் மலைகளும் சந்தித்துக்கொள்ளும் பேரழகான இடம்.

இந்த நகரத்தில் சான் பிரான்சிஸ்கோ பே (San Francisco Bay) என்னும் கடற்பகுதி உள்ளது. இந்த கடற்பகுதியில் மேல் கட்டப்பட்டுள்ள கோல்டன் கேட் பாலம் உலகப்புகழ் வாய்ந்த ஒரு பாலம் ஆகும். எண்ணற்ற ஹாலிவுட் திரைப்படங்களில் இந்த பாலத்தை காட்டியிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

golden gate bridge

 

முழுக்க முழுக்க இரும்பினால் உருவாக்கப்பட்டு, ஆரஞ்சு நிறத்தில் வண்ணமடிக்கப்பட்ட இந்த பாலத்தை தூரத்தில் நின்று ரசித்தாலும் சரி, அருகில் நின்று ரசித்தாலும் சரி. உங்களை பரவசத்தில் ஆழ்த்திவிடும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.

இந்த பாலத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கும் இடம் தான் Alcatraz தீவு. முன்னர் சிறைச்சாலையாக இருந்த இந்த தீவு, பிற்காலத்தில் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

Yosemite தேசிய பூங்கா :

உயரமான மலைகள், தாழ்வான பள்ளத்தாக்குகள்,ஆறுகள்,அருவிகள் என பார்ப்போர் மனதை மயக்கும் வண்ணம் இயற்கை அன்னையின் மொத்த அழகையும் ஒருசேர அமையப்பெற்ற இடம் தான் Yosemite தேசிய பூங்கா.

yosemite national park

இங்கு மலையேற்றம், மிதிவண்டி பயணம் மற்றும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வானுயர வளர்ந்து நிற்கும் மரங்களால் சூழப்பட்ட அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி, உங்கள் நினைவை விட்டு நீங்கவே நீங்காது.

Sequoia National Park :

வானுயர வளர்ந்து நிற்கும் மரங்கள். பார்ப்பதற்கே பயத்தையும் ஆச்சர்யத்தையும் கலந்த உணர்வை தரும். உலகின் மிகப்பெரிய மரங்கள் இந்த தேசிய பூங்காவில் தான் உள்ளன. அவற்றுள் சில மரங்களின் வயது 3000 ஆண்டுகளுக்கும் மேல் என்று சொல்கிறார்கள்.

Sequioa national park

இந்த அடர் காட்டுக்கு நடுவில் அமெரிக்காவின் மிக உயரமான மலைகளில் ஒன்றான Mt.Whitney மலை அமைந்துள்ளது. இந்த மலையின் உயரம் 14,495 அடி.

Hearst அரண்மனை :

1919 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரண்மனையை கட்டியெழுப்ப 28 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஆனாலும் இன்றளவும் முழுமையாக கட்டிமுடிக்கப்படாமல் இருக்கிறது இந்த அரண்மனை. இந்த அரண்மனையில் மொத்தம் 165 அறைகள் உள்ளன.

Hearst Castle

பத்திரிக்கை துறையின் ஜாம்பவான்களுள் ஒருவராக விளங்கிய William Randolph Hearst என்பவர் தான் இந்த அரண்மனையின் உரிமையாளராக இருந்தார்.

முன்னர், இந்த அரண்மனைக்குள் ஒரு தனியார் மிருகக்காட்சி சாலையும் இருந்துள்ளது. இன்றும் இந்த அரண்மனைக்குள் இருக்கும் புல்வெளி வளாகத்தில் எண்ணற்ற வன உயிரினங்கள் உலாவுவதை காணலாம்.

1600 அடி உயரமான ஒரு குன்றின் மீது கட்டியெழுப்பப்பட்ட இந்த அரண்மனையிலிருந்து பார்த்தால் பசிபிக் பெருங்கடலின் அழகை கடு ரசிக்க முடியும்.

The Getty Center Los Angeles :

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அமைந்துள்ள அற்புதமான இடம். அமெரிக்க நாட்டில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகங்களுள் முதன்மையானது இந்த இடம்.

The Getty Center Los Angeles

1900 காலகட்டம் முதல் வரையப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஓவியங்களை தனக்குள் கொண்டிருக்கிறது இந்த அருங்காட்சியகம்.

இவ்வளவு அழகான இடங்களை கொண்ட கலிஃபோர்னியாவை வாழ்வில் ஒரு முறையேனும் சுற்றி பார்த்து விட வேண்டும்.

Related posts