பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்ட பின்பு மருத்துவர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
ராஜினாமா
காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்டது. இச்சம்பவம் அந்தப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 நபர்கள் மீது மதுரை மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ‘நேற்று நள்ளிரவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டுக்கு சென்ற மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன், அவரை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘பாஜகவின் மத அரசியல், வெறுப்பு அரசியல் தனக்கு பிடிக்கவில்லை எனவும், இனி பாஜக கட்சியில் தொடர விரும்பவில்லை என தெரிவித்தார். மேலும், இன்று பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் மருத்துவர் சரவணன்’ தெரிவித்தார்.

