பயணம்

பஹாமாஸ் தீவுகளை சுற்றி பார்க்கலாம் வாங்க !

இந்த உலகிலேயே அழகான தீவுகள் எங்குள்ளன என்று கேட்டால் ஒரு நொடி கூட சிந்திக்காமல் பஹாமாஸ் (Bahamas) என்று கூறி விடுவேன். அந்த அளவுக்கு இயற்கை எழில் கொஞ்சும் அற்புத தீவுகளின் தொகுப்பு தான் பஹாமாஸ் தீவுகள்.

அட்லாண்டிக் பெருங்கடலில் ப்ளோரிடா (Florida) மாகாணத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இந்த தீவு தொகுப்பில் மொத்தம் 700 குட்டி தீவுகள் அடங்கியுள்ளன.

அந்த 700 தீவுகளில் சிறந்த 5 தீவுகளை சுற்றி பார்க்கலாம் வாங்க.

Atlantis Paradise Island :

141 ஏக்கர் பரப்பளவு கொண்ட உல்லாச விடுதிகளால் சூழப்பட்ட தீவு. இருபதுக்கும் மேற்பட்ட நீச்சல் குளங்கள். தீவுக்குள் அமைந்திருக்கும் சிறிய ஆற்றில் படகு சவாரி என்று இந்த தீவு எப்பொழுதும் களைகட்டும்.

எண்ணற்ற கடைகளும் உணவகங்களும் நிறைந்துள்ளன. திறந்த வெளி நீச்சல் குளங்களில் சுறா மீன்களுடன் சேர்ந்து நீச்சல் பயில்வதற்கு வசதி ஏற்ப்டுத்தப்பட்டுள்ளது. இதெல்லாம் வேற லெவல் கட்டமைப்பு.

Nassau :

சொகுசு கப்பல்களின் வேடந்தாங்கல் துன்று இந்த பகுதியை கூறலாம். எண்ணற்ற சிறிய மற்றும் பெரிய சொகுசு கப்பல்கள் வந்து செல்லும் ஒரு துறைமுகம். இங்கு இருக்கும் கேபிள் பீச் (Cable Beach) வெள்ளை மணல் படர்ந்த அழகான பிரதேசம். Bay தெருவில் அமைந்துள்ள கடைகள் மற்றும் அருங்காட்சியகங்கள் கண்டிப்பாக காண வேண்டியவை.

இங்கு இருக்கும் Blue Lagoon Island என்ற தீவில் டால்பின்களுடன் நேரடியாக விளையாடி மகிழலாம். அலைகள் அற்ற அமைதியான கடலில் கட்டுமர பயணம் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவைபோக இந்த Nassau பகுதியில் ஒரு மிருக காட்சி சாலையும் உள்ளது.

Harbour Island :

1700 களில் ஆங்கில கடல் பயணிகளால் கண்டுபிடிக்கப்பட்ட தீவு. அவர்கள் அன்று கட்டி எழுப்பிய சிறு கட்டிடங்கள் இன்றும் எந்த சேதமும் இல்லாமல் நின்று வரலாற்றை கூறுகின்றன.

பிங்க் நிறத்தில் மணலை கொண்ட கடற்கரைகளை இங்கு காணலாம். கண்ணை கவரும் வண்ணம் அமைக்கப்பட்ட விடுதிகள் நிறையவே உள்ளன.

இங்கு Snorkeling எனப்படும் நீச்சல் பயிற்சியும் இங்கு மேற்கொள்கிறார்கள். மீன் பிடித்தலும் கட்டுமர படகு சவாரியும் இங்கு மேற்கொள்ளப்படும் இதர சாகசங்கள்.

Grand Bahama Island :

கடலுக்குள் மையப்பெற்றிருக்கும் குகைகள். அவற்றை சுற்றி பார்க்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இங்கு இருக்கும் Garden of the Groves என்ற பூங்காவும் பிரபலம். பல்வேறு பறவை இனங்களை இங்கு காணலாம்.

Andros Island :

பவளப்பாறைகள் நிறைந்த தீவுப்பகுதி. நாம் யாரும் இது வரை கண்டிராத அறிய வகை வண்ண மீன்களை இங்கே எளிதாக காணலாம்.

அவற்றுடன் நீந்தி மகிழலாம். படகுகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு மீன் பிடிக்க செல்லலாம்.

ஐந்து பெரிய பூங்காக்களை கொண்டிருக்கும் தீவு. இங்கே ஒரு சதுப்பு நிலா காடும் உள்ளது. இந்த தீவில் இருக்கும் Androsia Hand Made Batik Factory என்னும் தொழிற்சாலைஉள்ளது.

நேரடியாக ஆயத்த ஆடைகளை இங்கு வாங்கலாம். அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த இந்த பஹாமாஸ் ஆடைகள் உலக பிரசித்தம்.

Related posts