பேரறிவாளன் விடுதலை எதிர்த்து காங்கிரஸ் கட்சினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளை துணியால் வாயை கட்டி போராட்டம் நடத்துவார்கள் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ்
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கையாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களை கொலை செய்த குற்றவாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளி என்று கூறி தண்டனை கொடுத்தது.
அதே உச்சநீதிமன்றம் சட்டத்தில் உள்ள சில சட்டநுணுக்கத்தை சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சனம் செய்யவில்லை. அதே சமயத்தில் ‘குற்றவாளிகள் கொலைகாரர்கள்’ என்பதையும் அவர்கள் நிரபராதிகள் இல்லை என்பதையும் எடுத்து கூற விரும்புகிறோம்.
தமிழர்கள் என்பதனால் விடுதலை
கொலை செய்தவர்கள் தமிழர்கள் என்பதாலும், அவர்கள் 25 ஆண்டு சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். அப்படி என்றால் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிறையில் இருக்கிறார்களே அவர்களை விடுதலை செய்ய தமிழ் உணர்வாளர்கள் ஏன் குரல் எழுப்பு வில்லை ? என கேள்வியெழுப்பியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் மட்டும் தான் தமிழர்களா. இதற்கு தமிழ் உணர்வாளர்கள் பதில் கூற வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
அறப்போராட்டம்
இதனை தொடர்ந்து, ‘நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் விதமாக நாளை (19.05.2022) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சினர்கள்.
அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளை துணியால் வாயை கட்டி கொண்டு ‘வன்முறையை எதிர்ப்போம் ‘ ‘கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்று எழுதிய பதாகையை கையில் பிடித்து கொண்டு போராடுவோம்.
காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கைவிடுத்துள்ளார்.