அரசியல்தமிழ்நாடு

ஓ. பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து விலக வேண்டும் – அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேச்சு !

அ.தி.மு.கவை நிர்வாகிக்கும் தகுதி, திறமை இல்லாதவர் ஓ.பன்னீர் செல்வம், கட்சியிலிருந்து நீக்கம் செய்யும் முன் ஓ.பன்னீர் செல்வம் தானாக விலகிக் கொள்ள வேண்டும் என எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட அதிமுக

திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மதுரை மாவட்ட புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘அ.தி.மு.கவுக்கு வலிமையான தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். ஜுலை 11-ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக அறிவிக்க உள்ளோம்.

admk aluvalagam

தேர்தலில் பிரச்சாரம் செய்யவில்லை

ஓ.பன்னீர் செல்வம் மீது நாங்கள் அன்பு கொண்டவர்கள். ஓ.பன்னீர் செல்வம் தவறான முடிவு எடுக்கும்போது சுட்டி காட்ட கடமைப்பட்டு உள்ளோம், சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்ய வரவில்லை. ஓ.பன்னீர் செல்வத்தின் நெருங்கியவர்களுக்கு கூட பிரச்சாரம் செய்யவில்லை. ஓ.பன்னீர் செல்வம் சுயநலத்துடன் செயல்பட்டு வருகிறார். ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுகவில் எந்தவொரு செல்வாக்குமில்லை.

ஓபிஎஸ் சுயநலவாதி

தென் மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது. ஓ.பன்னீர் செல்வம் தென் மாவட்டங்களில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக ஒரு மாயை உருவாக்கி உள்ளார். திமுக ஆட்சியை வாழ்த்துபவர்கள் துதி பாடுபவர்கள் அதிமுகவிற்கு தலைமை ஏற்கக்கூடாது.

ஓ.பன்னீர் செல்வம் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது தொகுதியை விட்டு எந்த தொகுதிக்கும் வாக்கு சேகரிக்க sellaவில்லை. தனது சுயநலம் கருதி தான் நேற்று ஓ.பன்னீர் செல்வம் பயணத்தை மேற்கொண்டார். 3 முறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், தென் மாவட்டங்களில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஒ.பி.எஸ்க்கு பொதுக் குழுவில் அவ மரியாதை ஏற்பட்டதாக சொல்கிறார். அதனை ஓ.பி.எஸ் தவிர்த்து இருக்கலாம்.

ops

இபிஎஸ்க்கு ஆதரவு

அதிமுகவில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்து உள்ளனர். தமிழ்நாட்டில் மிக சிறந்த தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார். தற்போதைய நிலைமையை புரிந்து கொண்டு ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து விலகிச் செல்ல வேண்டும்.

பன்னீர்செல்வமாக இருந்த ஒ.பி.எஸ் தற்போது கண்ணீர் செல்வமாக மாறி உள்ளார். ஒபிஎஸ்-யை பல காலம் ஒதுக்கி வைத்தவர் ஜெயலலிதா. ஒபிஎஸ் க்கு எதிராக எந்த சதி வலையும் பின்னப்படவில்லை. அவரை எங்கும் அவமதிக்கவில்லை என ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

eps4

Related posts