கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக திருப்பதியில் பக்தர்கள் குறைந்த அளவில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
உண்டியல் காணிக்கை
இதனால் உண்டியல் காணிக்கையும் ரூ.10 கோடியாக குறைந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் தேவஸ்தானத்திற்கு மூலம் 7 மாதத்தில் மட்டுமே ரூ.911.19 கோடி உண்டியல் வருவாயாக கிடைத்துள்ளது. குறிப்பாக கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டுமே ரூ.140 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகி புதிய சாதனை படைத்துள்ளது.
மேலும், கடந்த 7 மாதத்தில் 1 கோடியே 53 லட்சத்து 62 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.