அயோத்தியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 3 நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
தீபாவளி விழா
இதனையொட்டி அயோத்தியில் ஞாயிற்றுக்கிழமை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் 17 லட்சம் தீபங்கள் ஏற்ற இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த தீபாவளி விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை அயோத்தி செல்கிறார். அங்கு தீபம் ஏற்றி பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், டிஜிட்டல் முறையில் பட்டாசுகள் வெடிப்பதை பார்வையிடுகிறார். பின்னர் மோடி ராமர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத் தலங்களுக்கு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

