வரும் செப்டம்பர் 27-ம் தேதி முதல் 30ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆன்லைன் டோக்கன்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 22-ம் தேதி காலை 9 மணிக்கு, செப்டம்பர் மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் திருமலை தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் 27ம் தேதி தொடங்கவுள்ளது அதனால் அங்கப்பிரதட்சண டோக்கன்கள், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தங்கள் அங்கப்பிரதட்சண டோக்கன்களை இணையத்தில் முன்பதிவு செய்யுமாறு திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

