மார்க்கெட்டில் 110 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மீன்கள் பறிமுதல்
சமீபகாலமாக மார்க்கெட் மற்றும் உணவு விடுதிகளில் கெட்டுப்போன உணவு பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அந்தவகையில், கள்ளக்குறிச்சி நடுத்தக்கா பகுதியில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அங்குள்ள மீன் மார்க்கெட்டில் 110 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கெட்டுப்போன மீன்களை வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

