ரஷியாவில் 10 குழந்தைகள் வரை பெற்று கொண்டால் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
ரொக்கப்பரிசு
ரஷிய நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இது அந்த நாட்டின் அதிபர் புதினை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. இதன் காரணமாக அங்கு 10 குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளையோ பெற்றெடுத்து வளர்க்கிற தாய்மார்களுக்கு அன்னை நாயகி என்ற ‘சோவியத் கால பட்டம்’ வழங்கப்படும், அத்துடன் 10வது பிறந்த குழந்தைக்கு 1 வயது ஆனவுடன் 1 மில்லியன் ரூபிள் சுமார் 13 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அதிபர் புதின் அறிவித்துள்ளார். இதற்கான உத்தரவில் புதின் கையெழுத்து இட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

