இந்தியாசமூகம்

பஞ்சாப்பில் பரபரப்பு : பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்!

கணித தேர்வை ரத்து செய்ய தனது பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர் போலீசார் விசாரணையில் சிக்கியுள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தனியார் பள்ளிக்கு, மர்ம நபர் ஒருவரால் செப்டம்பர் 16-ம் தேதி பள்ளிக்கு வெடிகுண்டு வைக்க போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறைக்கு அளித்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பள்ளிக்கு வெடிகுண்டு விடுத்தது அதே பள்ளியில் படிக்கும் மாணவர் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாணவர் கணித தேர்வை ரத்து செய்வதற்காக தனது தந்தை அலைபேசியில் இருந்து பள்ளிக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts