சினிமாவெள்ளித்திரை

வடிவேலு படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு !

புதிய போஸ்டர்

வடிவேலு தற்போது மாரி செல்வராஜ் இயக்கி வரும் ‘மாமன்னன்’ படத்திலும் மற்றும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும், அவர் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இப்படத்தில் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு ஆகியோர் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சுபாஷ்கரன் தனது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வடிவேலுவின் பிறந்த நாளையொட்டி நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related posts