ட்விட்டர் பதிவு
சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கணவரின் இயலாமைக்கு ஆதரவாக அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் பேசிய காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று’ என்று குறிப்பிட்டு அந்த விடியோவை பகிர்ந்தார். அதில் ‘சேர்ந்ததன்று’ என்ற வார்த்தையை சில நெட்டிசன்கள் தவறாக புரிந்து கொண்டனர்.
இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு குரல் கொடுக்கும் விதமாக ‘விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளது சரிதான்’ என்று பிரபல தொகுப்பாளினி அஞ்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சேர்ந்ததென்று nu type pannalaye! சேர்ந்ததன்று nu correcta dhana type panniyirukaaru!
சேர்ந்தது + அன்று meaning சேர்ந்தது அல்ல ! சுத்தமான தமிழ்! Correcta dhana type panni irukaaru! Idhu puriyama evlo comments! 🤦♀️ https://t.co/6RlU2p3OKv— Anjana Rangan (@AnjanaVJ) September 12, 2022

