அரசியல்உலகம்

ராணி எலிசபெத் மறைவுக்கு மௌன அஞ்சலி அறிவிப்பு!

ராணி எலிசபெத் மறைவுக்கு இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மௌன அஞ்சலி

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் காலமானார். வரும் 19-ம் தேதி ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்று இங்கிலாந்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி சடங்கில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ராணி எலிசபெத் உடல் நாளை லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் 18-ம் தேதி ராணி எலிசபெத் மறைவுக்கு இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி கடைபிடிக்கப்படுகிறது.

 

Related posts