5 இந்து பெண்களால் தொடரப்பட்ட ஞானவாபி மசூதி வழக்கில் இன்று நீதிமன்றத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வாரணாசி
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மிகவும் பழமை வாய்ந்த சிவபெருமானின் கோயிலான காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இதற்கு அருகில் இஸ்லாமிய வழிபாட்டு தலமான ஞானவாபி பள்ளிவாசல் உள்ளது. இது முகலாய மன்னர் அவுரங்கசீப் அவர்களால் கட்டப்பட்டது. இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கௌரி அம்மன் உள்ளது. அந்த இந்து மத கடவுளை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று 5 இந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனு தாக்கல்
அந்த மனுவில் 16ஆம் நூற்றாண்டில் காசி கோயிலை இடித்து தான் இங்கு மசூதி கட்டப்பட்டு இருக்கிறது. ஞானவாபி மசூதி வளாக சுவரில் உள்ள விநாயகர், அனுமன், நந்தி, சிங்கார கௌரி அம்மன் போன்ற இந்துமத கடவுள்களை ஆண்டு முழுவதும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.
சிவலிங்கம்
இதனிடையே ஞானவாபி மசூதியில் வளாகத்தில் உள்ள ஒரு குளத்தில் இந்து மத தெய்வமான சிவலிங்கம் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதன்பேரில் அந்த மசூதிக்குள் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆய்வு முடிவுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தக் குறிப்பிட்ட பகுதியை சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம் உத்தரவு
மேலும், அது சிவலிங்கம் அல்ல செயற்கை நீரூற்று என முஸ்லிம் தரப்பினர் சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஞானவாபி மசூதிக்குள் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் உத்தரவிட்டது.
இன்று விசாரணை
இந்நிலையில், இன்று இந்த வழக்கு வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இரண்டு தரப்பினர் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதிகள் இன்று விசாரிக்கவுள்ளனர். மற்றும் இந்த வழக்கு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகின்றது.
பாபர் மசூதி விவகாரம் போல பரபரப்பாக காணப்படும் இந்த பிரச்சனை அப்பகுதியில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.